August 27, 2020
தண்டோரா குழு
சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும்
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கோவை சித்தாப்புதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
பாஜக வில் இணைந்தது பெருமையாக உள்ளது.சாதாரண மக்களுக்காக செயல்பட கூடிய கட்சியாக பாஜக உள்ளது.கோவை பாஜக வின் முக்கிய தளமாக உள்ளது.தேர்தலில் எந்த பொறுப்பில் கட்சி போட்டியிட சொன்னாலும் அதற்கு தயாராக உள்ளேன்.தமிழகத்தில் பாஜக ஒரு புதுப் பாதையை உருவாக்கும்.
45 வயதுக்கு குறைவான இளைஞர்கள் வருகிற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வை மிகவும் எதிர்நோக்கி உள்ளது.என்ன பொறுப்பு வழங்கினாலும் அதை ஏற்று செயல்படுவேன்.
தமிழகத்தில் வருகின்ற தேர்தலில் இளைஞர்கள் அதிகமாக பாஜக விற்கு வாக்களிப்பார்கள். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி தினிப்பு இல்லை.
மத்திய அரசில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் தமிழின் தொன்மையை முதன்மைப்படுத்துகிறார்.நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என்பது வல்லுனர்கள் கருத்தாக உள்ளது.கேரளாவில் வெற்றிகரமாக நீட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.தமிழகத்தை மாற்றுப்பாதையில் கொண்டுபோக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பொருளாதாரத்தை சரியாக கையால்வதில் திராவிட கட்சிகள் தவறிவிட்டது.கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி தடைபட்டு நிற்கின்றது.