• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு !

May 25, 2019 தண்டோரா குழு

பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில், பா.ஜ., 303 எம்.பி.,க்களை பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. சிவசேனா, சிரோண்மனி அகாலிதள், ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மொத்தம் 50 எம்.பி.,க்களை வென்றுள்ளனர். இதையடுத்து, புதிதாக வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, அத்வானி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதைபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். இதையடுத்து, பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அத்வானி ,ஜோஷி காலில் விழுந்து மோடி ஆசி பெற்றார். பின்னர், முதலமைச்சர் பழனிசாமி, அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க