• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக தோல்விக்கு காரணம் இது தான் – சி.பி.ராதாகிருஷ்ணன்

December 13, 2018 தண்டோரா குழு

5 மாநில தேர்தல்களில் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பின் காரணமாகவே பா.ஜ.க தோல்வியை சந்தித்து இருக்கின்றது என மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவையில் உள்ள காந்திபுரம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

நடந்துமுடிந்ததேர்தலில் கிடைத்த தோல்வி என்று தாங்க முடியாத வேதனை என்றாலும் மக்கள் தீர்ப்பை பா.ஜ.க என்றும் ஏற்றுக்கொள்ளும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க தொடர்ச்சியாக வெற்றி பெற்ற போது அனைத்து கட்சிகளும், எலெக்ட்ரானிக் மிஷினை கொண்டு வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டினர். ஆனால் இன்று அதே எலெக்ட்ரானிக் மிஷன் மூலமாகவே காங்கிரஸ் எப்படி வெற்றி பெற முடிந்தது என கேள்வி எழுப்பினார்.

மேலும், மக்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் வெற்றி பெறுகின்றனர் .ஒரு சில இடங்களை இழந்ததால் மத்திய பிரதேசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கின்றோம். ராஜஸ்தானிலும் சில இடங்களை இழந்து இருக்கின்றோம் சத்தீஸ்கரில் தோல்வி அடைந்து இருக்கின்றோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை போல காங்கிரஸ் கட்சியினர் பேசுகின்றனர் தெலுங்கானா தேர்தலில் துவக்கத்திலேயே காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்திருக்கின்றது. எங்களை பொறுத்த வரை தோல்வி என்பது மெருகூட்டி கொள்வதற்கும் சோதித்து கொள்வதற்கும் என உணர்கின்றோம்.அடுத்த தேர்தலில் நிச்சயம் பா.ஜ.க வெற்றி பெரும் மீண்டும் மோடி பிரதமராகி கங்கையும் காவிரியும் இணைக்கும் திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டுவார். கமல் ஒரு அரசியல் கட்சியின் குழந்தை தலைவராக இருக்கின்றார். அவர் இதுவரை வெற்றி தோல்வியை அவர் சந்திக்க வில்லை எனவே இப்போது அவருக்கு பதில் சொல்ல தேவையில்லை.

ரஜினி தனி மனிதராக வெளிப்படையாக வெள்ளை உள்ளத்துடன் பேசிகின்றார். மூன்று நாட்களுக்கு முன்னர் மோடி கடுமையாக உழைப்பதாக சொன்னார்.இப்போது தோல்வி அடைந்து இருப்பதாக சொல்லி இருக்கின்றார். அவர் அறிக்கையில் இதற்கு மேல் உள்ளே சென்று பார்க்க விரும்பவில்லை.5 மாநில தேர்தல்களில் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பின் காரணமாகவே பா.ஜ.க தோல்வியை சந்தித்து இருக்கின்றது. அதை மாற்றுகின்ற வல்லமை பா.ஜ.க விற்கு உண்டு எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க