September 14, 2017
தண்டோரா குழு
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா இன்று(செப் 14) அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.
இதுகுறித்து ஹெச் ராஜா கூறுகையில்,
என்னுடைய மணி விழாவில் பங்கேற்க திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன்.இச்சந்திப்பின் போது அரசியல் குறித்து பேசவில்லை என்றும்,நட்பு ரீதியான சந்திப்பு என்று கூறினார்.மேலும்,நான் என் அரசியல் வாழ்க்கையையும், எனது சொந்த வாழ்க்கையையும் ஒருபோதும் கலந்ததில்லை. ஏற்கனவே எனது மகள் திருமணத்திற்கு ஸ்டாலினை அழைத்த போது, அவர் வருகை தந்திருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹெச் ராஜாவை சாரண-சாரணியர் இயக்கத் தலைவராக தேர்ந்தெடுப்பதற்காக தமிழக அரசு முயற்சிப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.