August 22, 2020
தண்டோரா குழு
கோவையில் பா.ஜ.க.ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு சார்பாக பொதுமக்கள் குறை தீர்ப்பு அலைபேசி சேவை துவங்கப்பட்டது.
கோவை மாநகர் மாவட்ட ப.ஜ.க.அலுவலகத்தில் ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு சார்பாக பொதுமக்கள் குறை தீர்ப்பு அலை பேசி சேவை துவங்கப்பட்டது. இதற்கான விழாவில் மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் நந்தகுமார் கலந்து கொண்டு அலை பேசி சேவையை துவக்கி வைத்தார்.
பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள குடிநீர் ,சாக்கடை பிரச்னைகள் மற்றும் ,மின் இணைப்பு துண்டிப்பு போன்ற அன்றாடம் பிரச்னைகளை இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் அவர்களது பிரச்னை சம்பந்தப்பட்ட துறையினரை தொடர்பு குறைகளை தீர்க்க ஏற்பாடு செய்ய வசதியாக இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட தலைவர் பேசுகையில்,
இந்த சேவை பொதிமக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் வகையில் இருக்கும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க.ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் புல்லட் சதீஷ்,செயலாளர் அபினவ்,ராஜேந்திர கெமரன், வழக்கறிஞர் மோகன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.