October 16, 2020
தண்டோரா குழு
கோவை பாஜக ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல்கலாம் ன் 89வது பிறந்தநாளை முன்னிட்டும் கலாமின் கனவை நினைவாக்கும் வகையிலும் நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாஜகவின் கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவின் மாவட்ட தலைவர் புல்லட் சதீஷ் தலைமையில் கோவை மாநகர் பகுதியில் உள்ள ராமலிங்க செட்டியார் மேல்நிலை பள்ளி, பிருந்தாவன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 40 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு துணைத் தலைவர் குமரன் செயலாளர்கள் அபிநவ், ஸ்ரீதர் மற்றும் மண்டல் தலைவர் அர்ஜுன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.