• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் பயப்படாத ஒரே இயக்கம் அதிமுக – அமைச்சர் ஜெயக்குமார்

January 19, 2019 தண்டோரா குழு

பாஜக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் பயப்படாத ஒரே இயக்கம் அதிமுக தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கொடநாடு நாடு எஸ்டேஸ்ட் விவகாரத்தில் முதல்வர் பழனிச்சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

கோடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் திமுக உள்ளது. சயான், மனோஜ் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர். சயன், மனோஜுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களும், ஜாமீன் கொடுத்தவர்களும் திமுகவை சேர்ந்தவர்கள். அதிமுக மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் திமுக செயல்படுகிறது. மு.க.ஸ்டாலின் திசை தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிருக்கிறார். தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சிகளின் நிலைப்பாட்டில் மாறுபாடு இருக்கும். பட்டாசு தொழிலை பாதுகாக்கும் வகையில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். தேர்தல் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை ஏற்கும்; கட்சி அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது கடந்த காலங்களில் திமுக இரட்டை வேடம் கொண்டிருந்ததை மக்கள் அறிவர். பாஜக உட்பட எந்த இயக்கத்துக்கும் அச்சப்படாத கட்சி அதிமுக. எதற்காக அச்சப்பட வேண்டும். அதிமுக என்பது இமயம்; கூட்டணி அமைந்தால் அதற்கு இமயமான அதிமுகவே தலைமையேற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க