• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று ஆணித்தரமாக சொல்கிறேன் – மு.க.ஸ்டாலின்

January 11, 2019 தண்டோரா குழு

பா.ஜ.கவுடன் எப்போதும் தி.மு.க கூட்டணி அமைக்காது திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பழைய நண்பர்களை கூட்டணிக்கு வரவேற்க தயார் கூட்டணிக்கு பாஜகவின் கதவுகள் என்றுமே திறந்து இருக்கும் நேற்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.கவுடன் எப்போதும் தி.மு.க கூட்டணி அமைக்காது திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், வாஜ்பாயுடன் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவும் விநோதமாகவும் உள்ளது.நாட்டை பிளவுபடுத்தும் எந்த திட்டத்தையும் முன்வைக்காததாலேயே வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவளித்தது. குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் கலைஞர் – பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். மதவாதக்குரல்கள் எழுந்ததும் பா.ஜ.க கூட்டணியில் இருந்து தி.மு.க உடனடியாக வெளியேறியது.பிரதமர் மோடி வாஜ்பாய் அல்ல.மோடி உருவாக்கிய கூட்டணி வாஜ்பாய் உருவாக்கியது போல் ஆரோக்கியமானது இல்லை.தமிழக உரிமைகள் மோடி ஆட்சியில் தான் மிக அதிக அளவில் பறிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பண்முக தன்மையை பிரதமர் மோடி பாதுகாப்பவர் அல்ல என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க