• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜகவுடன் கூட்டணி வைத்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால் என்ன தவறு? – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி

September 8, 2017 தண்டோரா குழு

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தால் என்ன தவறு என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் 10 ரூபாய் பால் பாக்கெட், 4 விதமான ஐஸ்கிரீம்கள், 90 நாள்கள் வரை கெட்டுப்போகாத ஆவின் டிலைட் பால் ஆகியவற்ற அறிமுகம் செய்யும் விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அப்போது,ஓய்வு பெற்ற ஆவின் பணியாளர்களுக்கு தினமும் அரை லிட்டர் இலவச பால் வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ராஜேந்திரபாலாஜி,

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே முந்தைய காலங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தததை சுட்டிக்காட்டினார்.பாஜகவுடன் கூட்டணி வைத்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால் என்ன தவறு என கேள்வி எழுப்பினர். மேலும், யாருடன் கூட்டணி அமைத்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க