• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி கெட்டப்பில் மத்திய பிரதேச முதல்வர் வைரலாகும் வீடியோ !

August 31, 2018 தண்டோரா குழு

இன்றைய காலகட்டத்தில்இணையதளம்கருத்துக்கள் மக்களை எளிதில் சென்றடையும் ஒரு மாபெரும் ஊடக சக்தியாக உள்ளது. தங்கள் கருத்துகளை புகைப்படங்கள் மூலமாகவே, வீடியோ வடிவிலோ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் அது வைரலாகி மக்களிடம் சென்றடைகிறது.

மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்,மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆதரவாளர்கள் சிலர் வீடியோ ஒன்றை உருவாக்கி ட்ரெண்டாக்கியுள்ளனர்.அந்த வீடியோவில் மத்திய பிரதேசம் மகிழ்மதியாகவும், அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பாகுபலியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதைபோல் காங்கிரஸ் தேர்தல் பரப்புரைக் குழு தலைவர் ஜோதித்ராய சிந்தியா, பல்வால் தேவனாகவும் உருவாக்கப்படுத்தப்பட்டுள்ளது. சிவராஜ் சிங் ஆகிய நான் மகிழ்மதியின் (மத்திய பிரதேசத்தின்) அரசனாக (முதலமைச்சராக) என பேசுவது போலவும் பல்வால் தேவனை வீழ்த்தி, பாகுபலியான சிவ்ராஜ்சிங் மத்திய பிரதேச மாநிலத்தை காப்பதைப் போல வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த வீடியோ பாஜக சார்பில் தயாரிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அம்மாநில அமைச்சர் விஷ்வாஸ் சாரங், பாஜக அரசின் சாதனைகளை கண்ட பிறகு சிவ்ராஜ்சிங் சவுகானை மக்கள் பாகுபலியாகவே கருதுவதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க