November 2, 2017
தண்டோரா குழு
பாகிஸ்தான் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக அஜய் பைசாரியா நியமயக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டுக்கான இந்திய தூதரக கௌதம் பம்பாவாலே பணியாற்றி வந்தார்.தற்போது அவர் சீன நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டதால்,அஜய் பைசாரியா பாகிஸ்தான் நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அஜய் பைசாரியா இந்திய தூதரகத்தில்(1992 -1995)-வர்த்தக அமைச்சகத்தின் ஒரு பகுதியான வெளியுறவு துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்தார்.பின்பு (1995-1999)பெர்லின் தூதரகத்தின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றினார். அதன் பிறகு, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு தனி செயலராக பணியாற்றினார்.