• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட வேண்டும் – கவுதம் பம்பவாலே

February 11, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட வேண்டும் என இந்தியா விரும்புகிறது என்று இந்திய தூதரக அதிகாரி கவுதம் பம்பவாலே தெரிவித்துள்ளார்.

8-வது கராச்சி இலக்கிய விழாவை பாகிஸ்தான் மாநிலம் காரச்சியில் திறந்து வைத்து அவர் கூறியதாவது:

“பாகிஸ்தான் தன் தேசத்தை காக்க எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மனமார பாராட்டுகிறது. பாக்கிஸ்தான் தனது அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளுடன் அமைதியை பின்பற்ற வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

இந்த ஆண்டு பாகிஸ்தான் தனது 7௦-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

இந்த விழாவிற்கு இந்தியாவை சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு இருப்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க