• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தான் குரலில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் – வானதி ஸ்ரீனிவாசன்

February 25, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், அச்சட்டம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற 28 ம் தேதி பேரணி நடத்தப்படுமென அக்கட்சியின் மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவெற்றப்பட்ட பிறகு அமலுக்கு வந்த பின்னர், இஸ்லாமிய மக்கள் காவல் துறை அனுமதியின்றி ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். சிஏஏ நாடாளுமன்றத்தில் சட்டமாக்கபட்ட பின்னரும், இந்திய முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பில்லை என தெளிவு கொடுத்த பிறகும், தமிழகத்தில் சுயலாபத்திற்காக இஸ்லாமிய சமூகத்தை தூண்டி விட்டு அரசியல் நெருப்பில் ஸ்டாலின் குளிர் காய்கின்றார். இந்து கடவுளுக்கு எதிராக பேசுவதும், பாகிஸ்தானுக்கு ஆதராவக கோஷம் எழுப்பதும் தொடர்ந்து வருகிறது.திமுக சிறுபான்மை ஆதரவு என்ற பெயரில் தேசத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிடுகிறது. பாகிஸ்தான் குரலில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை இருப்பதாகவும், வன்முறைகள் ஆங்காங்கே நடைபெறுவதாகவும் அவர் கூறினார். இச்சட்டம் குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்களை முன்னெடுக்கும் இயக்கங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வரும் 28 ஆம் தேதி மாலை அனைத்து மாவட்ட தலை நகரங்களில் சி ஏ ஏ ஆதரவு பேரணி மற்றும் ஆட்சியரிடம் மனு அளிக்கபடும் என்று கூறினார்.

மேலும் படிக்க