• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தானில் போலீஸ் சூட்டில் 4 தீவிரவாதிகள் சாவு

January 19, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தானில் பாகிஸ்தான் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ரிஸ்வான் என்ற ஆசிப் சோட்டு உள்பட 4 தீவிரவாதிகள் இறந்தனர்.

இது குறித்து பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புத் துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (ஜனவரி 19) கூறியதாவது:

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஆசிப் சோட்டுவின் தலைக்கு 3௦ லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆசிப் சோட்டு பாகிஸ்தானில் உள்ள பாரூகாபத் என்னும் இடத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் 4 மோட்டார் சைக்கிளில் வருவதாக பயங்கரவாத எதிர்ப்பு துறை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷேகுர்புரா என்னும் ரயில் சாலையில் காவல் துறையினர் நிறுத்தி சரணடையும்படி கட்டளையிட்டனர்.

அதை ஏற்க மறுத்த அவர்கள் காவல் துறையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில் 4 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 3 பேர் தப்பியோடி விட்டனர்.

உயிரிழந்தவர்களில் தீவிரவாதத் தலைவர் ஆசிப் சோட்டுவும் ஒருவர். மற்றொருவர் டாக்டர் ஷாகிர் உல்லாஹ் என்ற அலி சுபியன், நூருல் அமீன் ஆவார். அவர்கள் வைத்திருந்த நவீன துப்பாகிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க