• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பழைய வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்பும் பேச்சுக்கே இடமில்லை – தேர்தல் ஆணையர் அரோரா

January 24, 2019 தண்டோரா குழு

இந்தியாவில் மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்புகார்களை தேர்தல் ஆணையம் முற்றிலும் மறுத்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறுகையில்,

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடா்பான விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் அனுமதி கோரியுள்ளது. பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் திரும்ப மாட்டோம். தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தான் பயன்படுத்துவோம் என்று தெரிவித்தார். மேலும் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த சின்னத்தில்தான் வாக்குப் பதிவாகியுள்ளதா என்பதை கண்டறியும் பேப்பர் ட்ரெய்ல் உற்பத்தியில் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை ஈடுபட்டுள்ளன. இவை பலத்த பாதுகாப்புடன் கூடியது. ஏனெனில் இவர்கள் பாதுகாப்புத்
துறைக்காக பணியாற்றுபவர்கள்.

இது தொடா்பாக அரசியல் கட்சிகள் உட்பட எந்தவொரு நபா்களிடமிருந்தும் நாங்கள் எந்தவொரு விமா்சனம் மற்றும் கருத்துக்களை எதிர்பார்கிறோம். திறந்தமனதோடு அதனை பரிசீலிக்க நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். அதே நேரத்தில், நாங்கள் மிரட்டலினால், அச்சுறுத்தலினால் அல்லது அழுத்தங்களுக்கு அஞ்சி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையை கைவிட்டுவிட்டு வாக்குச்சீட்டு ஆவணங்களின் சகாப்தத்தை ஆரம்பிக்கவேமட்டோம் என்று திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க