• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழைய மொபைல், பைக் வாங்கும்போது அது திருட்டுப் பொருளா என்பதை கண்டுபிடிக்க DIGICOP என்ற ஆப் அறிமுகம்

February 6, 2019 தண்டோரா குழு

சென்னை எழும்பூரில் நடந்த விழாவில் மொபைல் போன் திருட்டை தடுக்க உதவும் DIGICOP என்ற ஆப்பை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டிஜிகாப் என்ற மொபைல் செயலியை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து சிசிடிவி கேமிரா பொருத்துவதன் அவசியம் குறுத்த குறும்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

பின்னர் விழாவில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்,

சிசிடிவி கேமரா குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் ஆதரவோடு சி.சி.டி.வி. கேமரா அமைக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விஜய் சேதுபதி, சாலமன் பாப்பையா, கோபிநாத், டாக்டர் சாந்தா, ஐசரி கணேஷ், கமலா செல்வராஜ், ஜோஸ்னா செல்லப்பா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழிப்புணர்வு திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. இந்த டிஜிகாப் செயலி மூலம் செல்போன், பைக் திருட்டை தவிர்க்க முடியும். செல்போன் திருட்டை தேசிய அளவில் தடுக்க “டிஜிகாப்” செயலி உறுதுணையாக இருக்கும். அதனை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். டிஜிகாப்” செயலி மூலம் செல்போன் திருட்டுகள் பெருமளவு குறையும். பழைய மொபைல், பைக் வாங்கும்போது அது திருட்டுப் பொருளா என்பதை கண்டுபிடிக்க இந்த செயலி உதவும்’.

இவ்வாறு அவர் பேசினார்.

விஜய் சேதுபதி பேசும் போது,

‘மக்களின் முக்கிய பிரச்சனையை காவல்துறையினர் கையில் எடுத்திருப்பது சிறப்பானது. காவல் நிலையங்களில் குப்பையாக இருந்த வாகனங்கள் அகற்றப்பட்டது பாராட்டத்தக்கது’ என்று குறிப்பிட்டார்.

இந்த செயலி மூலம் உபயோகித்த போனை 2வது முறையாக வாங்கும்போது திருடிய மொபைலா என கண்டுபிடிக்கவும், மொபைல் போன் காணாமல் போனால் புகார் அளிக்கவும், போக்குவரத்து தொடர்பான தகவல்களை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க