• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன் காலமானார்

April 2, 2019 தண்டோரா குழு

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் (79) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய வெகுசில இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் மகேந்திரன். தம் படங்களின் வழியாக வாழ்வின் மன நடுக்கோட்டைப் பிடித்துச் சென்றவர். ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும், உதிரிபூக்கள் உள்ளிட்ட பல படங்கள் இவரது இயக்கத்தில் வெளிவந்த வெற்றி படங்களாகும். ஆரம்ப காலத்தில் திரைப்படங்களுக்கு கதை வசனம் மட்டுமே எழுதி வந்த மகேந்திரன் இயக்கிய முதல் படமான முள்ளும் மலரும் இன்று வரை தமிழ் சினிமா கண்ட சிறந்த படைப்புகளுள் ஒன்றாக போற்றப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய்யின் தெறி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் ரஜினியின் பேட்ட படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் மகேந்திரனுக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டதால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவரது உயிர் பிரிந்தது. தமிழ் திரையுலகத்திற்கும், ரசிகர்களுக்கும் மகேந்திரனின் இறப்பு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க