October 12, 2020
தண்டோரா குழு
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள முழுமையை வெளிக்கொணர்வதே முழுமையான கல்வி என்றார் விவேகானந்தர். ஆனால், இன்று கல்வி என்பதன் வரையறை மாறி வெறும் புத்தக அளவிலே இருக்கிறது. இதன் விளைவு, காலை விழித்ததிலிருந்து இரவு உறங்க செல்லும் வரை படிப்பு சார்ந்தும் இதர திறன்களுக்காகவும் பந்தயக் குதிரைகளாகக் குழந்தைகளை விரட்டபடுகிறார்கள்.
மாணவர்களின் இந்த மன அழுத்தத்தை போக்க பள்ளிகள், கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் மனநலவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களிடம் குழந்தைகள் எல்லாப் பிரச்சனைகளையும் வெளிப்படையாகப் பேச முடியாது. குழந்தைகளுக்கென்று தனியாக ஆலோசகரை அமர்த்த ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் முன் வர வேண்டும் என பல கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.
கல்வியின் நோக்கம் அறிவை வளர்ப்பதற்காக தான். மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றும் ஓடும் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மாணவர்கள் உடல் வலிமை பெற்றால், எதையும் சந்திக்கும் திறன் வந்துவிடும். அவர்களின் மன அழுத்தத்தை போக்க பள்ளிகளில் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மன அழுத்தத்தை போக்க கவுன்சலிங், யோகா போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.இதன் முக்கிய ஒன்றாக இருப்பது தியானம். ஏனெனில், உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு மன ஆரோக்கியமும் முக்கியம். மன ஒருநிலையை பெற்றால் மாணவர்கள் ஆரோக்கியத்தை பெறுவார்கள். பள்ளி மாணவர்களுக்கு தியானம் எந்த அளவிற்கு முக்கியம்?
செளமியா பிரதீப் – பள்ளி ஆசிரியை

முன்பெல்லாம் பள்ளியில் மாணவர்கள் கற்றுக்கொண்டு வீட்டில் வீட்டு படம் கற்றுக்கொள்வார்கள். ஆனால், தற்போது பாடத்திட்டங்கள் புதுமையாக உள்ளன. இதனால் அதிகம் இணையத்தில் தேடி தேடி படிக்க வேண்டிய சூழலில் மாணவர்கள் உள்ளனர்.தற்போது நிறைய ஆன்லைன் வகுப்புகள், புதுமையான பாடத்திட்டங்கள் என மாணவர்கள் மன அழுதத்தில் தான் இருக்கிறார்கள்.இதனால் பள்ளி மாணவர்களுக்கு தியானம் மிகவும் முக்கிய தேவையாக இருக்கிறது.தியானத்தினால் ஐந்து நன்மைகள் என்னவென்றால் மன அழுத்தம் குறையும், அறிவை வளர்க்கும்,சரியான தூக்கத்தை ஏற்படுத்தும்,மன வலிமை அதிகரிக்கும்,தவறான சிந்தனைகள் வராது. தினமும் தியானம் செய்தால் உடல் வலிமையையும் மன வலிமையும் அதிகரித்து மாணவர்கள் ஆரோக்கியமாகவும் புதுமையாகவும் சிந்திப்பார்கள்.
காயத்ரி வேல்முருகன் – பெற்றோர்

இப்பதெல்லாம் குழந்தை செல்போன் மற்றும் டிவியிலேயே அதிகம் மூழ்கியுள்ளனர். இதனால் நாம் என்ன கேட்டாலும் அவர்கள் பதிலே சொல்ல மாட்டார்கள். இதனால் குழந்தைகளுக்கு தியானம் பற்றி புரிய வைத்து அவர்களுடன் நாமும் தியானம் செய்ய வேண்டும் .தேர்வு மற்றவர்களிடம் பேசவே மாணவர்கள் பயப்படுகிறார்கள்.தியானம் மூலம் அது குறையும். மனசோர்வு இருக்காது,புதுசு புதுசா அவர்கள் சிந்திப்பார்கள். மதிப்பெண் மீது மட்டும் குறியாக இருந்து ஓடும் மாணவர்களுக்கு தியானம் என்பது இன்றியமையாதா ஒன்றாக இருக்கிறது. பள்ளியிலும் மாணவர்களுக்கு தியானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் புதியதோர் சமூகதை நாம் உருவாக்க முடியும்.
மாணவர்களுக்கு தியானம் எந்த அளவிற்கு முக்கியம் என்பது குறித்து அனைவரும் அறிந்த ஒன்றே. பள்ளியில் தியானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? பொறுத்து இருந்து பார்ப்போம்.