• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

April 13, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை கோவை ஆனைகட்டி பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஆறுமுகம் (54) பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் ஆறுமுகத்ைத குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி உத்தரவு பிறப்பித்தார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 4 போக்சோ குற்றவாளிகள் உட்பட 14 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க