• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பள்ளி குழந்தைகளுக்காக ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற விழிப்புணர்வு திட்டம் துவக்கம்

June 25, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பள்ளி குழந்தைகளுக்காக ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற விழிப்புணர்வு திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார். மேலும் இதில் பொதுமக்கள் தவறவிட்டு புகார்கள் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்

கடந்த 3 மாத காலத்தில் 235 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் பள்ளி குழந்தைகளுக்காக ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற விழிப்புணர்வு திட்டம் கோவை மாவட்ட காவல்துறையால் துவங்கப்பட்டுள்ளது எனவும், இத்திட்டம் குழந்தைகளுக்கு இருக்கும் பாதிப்பை அவர்களுக்கே தெரியபடுத்தி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி படுத்தும் வண்ணம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனை உட்கோட்ட வாரியாக பள்ளி கூடங்களுக்கே நேரில் சென்று, முதலில் ஆசிரியர்களுக்கு இது குறித்து தெரியபடுத்த உள்ளதாகவும், குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் வந்தால் எவ்வாறு காவல்துறையினரிடம் அணுகி தீர்வு காணலாம் என எடுத்துரைக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள 997 பள்ளிகளுக்கும் சென்று இந்த விழிப்புணர்வு திட்டம் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு எடுத்து கூற உள்ளதாகவும் கூறினார். இதற்காக 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 10 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் என இரண்டு பிரிவுகளாக பிரித்து 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு good touch bad touch போன்ற அடிப்படைகள் குறித்தும் அவ்வாறு யாரேனும் அணுகினால் யாரை அணுக வேண்டும் என தெரிவிக்க உள்ளோம் எனவும் 10 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைனில் good approach, bad approach போன்றவை குறித்தும் எடுத்துரைக்க உள்ள்தாக தெரிவித்தார்.

இதற்காக கடந்த 2 மாதங்களாக தனிப்படை இதற்காக பணியாற்றி உள்ளதாக கூறினார். மேலும் தற்போதைய காலத்தில் குழந்தைகளு இப்படியான பிரச்சினை அவர்களுக்கு நெருக்கமானவர்களால் தான் அதிகம் நிகழ்வதாகவும் கூறினார். வருகின்ற திங்கட்கிழமை முதல் இந்த விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சி துவங்க உள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க