• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளிகளில் National Council of Educational Research and Training புத்தகங்களை விற்க அனுமதி – சிபிஎஸ்இ

December 21, 2017 தண்டோரா குழு

புதுதில்லியில் பள்ளி வளாகத்தில் உள்ள கடைகளில், National Council of Educational Research and Training புத்தகங்களை தவிர வேறு புத்தகங்கள் விற்ககூடாது என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், பள்ளி வளாகத்திற்குள் உள்ள கடைகளிலிருந்து தான் பிள்ளைகளுக்கு புத்தகங்கள், பள்ளி சீருடைகள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்ளை வாங்க வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்ததது. இதையடுத்து, பள்ளிகள் மாணவர்களுக்கு கல்வி கற்று தருவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியா முழுவதிலும் சுமார் 18,000 சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.அந்த பள்ளிகளின் வளாகத்தில் உள்ள கடைகளில் தனியார் நிறுவனத்தின் புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும், National Council of Educational Research and Training புத்தகங்களை மட்டுமே விற்க வேண்டும் என்றும் அந்த கடைகளில் விற்கப்படும் ஸ்டேஷனரி பொருட்கள் எம்ஆர்பி விலைக்குக்கு அதிகமாக இருக்ககூடாது என்றும் சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க