• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல்வேறு திட்டங்களை வழங்கிய இந்த அரசை மக்கள் என்றும் மறக்க கூடாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

March 9, 2019 தண்டோரா குழு

பல்வேறு திட்டங்களை வழங்கிய இந்த அரசை மக்கள் என்றும் மறக்க கூடாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 224 . 10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள, குளங்களைக் தூர்வாரி புணரமைத்தல், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கோவை சட்டமன்ற மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,

50 ஆண்டு காலங்களில் இல்லாத வளர்ச்சியை கோவை நகரில் இந்த அரசு தந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் மெரினா பீச் இருப்பது போல, கோவை மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்தை ஏற்படுத்தும் வகையில் குளக்கரைகள் புனரமைக்கப்பட்டு மக்களின் பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு திட்டங்களை வழங்கிய இந்த அரசை மக்கள் என்றும் மறக்க கூடாது. கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெறுவது போல தமிழகத்தில் மற்ற பிற மாநகராட்சிகளிலும் இது போன்று பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க