• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மறியல் போராட்டம்

December 14, 2021 தண்டோரா குழு

காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் மாநில அரசு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

1.பெண்களுக்கு 55 வயதில் இருந்தே பென்சன் வழங்க வேண்டும்.

2. நலவாரியம் தொடர்பான ஆன்லைன் பதிவுகளை எளிமையாக்க வேண்டும்.

3.கட்டுமான பணி மேற்கொள்ளும் இடத்தில் பெண்களுக்காக கழிப்பறை வசதியினை ஏற்படுத்த வேண்டும்.

4. கட்டுமான பொருட்களின் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும், தனியார் பெயிண்ட் (ஏசியன் பெயிண்ட்) விளம்பரத்தை தடை செய்ய வேண்டும்.

5. தொழிலாளிகளுக்கு மாத ஓய்வூதியம் 3000 ரூபாயும் இயற்கை மரணம் அடைந்த பிறகு 2 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். சாலை மறியலில் ஈடுப்பட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க