March 21, 2018
தண்டோரா குழு
கேரள மாநிலத்திற்கென தனி விலங்கு, பறவை, மலர் மற்றும் மீனை தொடர்ந்து தற்போது அம்மாநில அரசு தனக்கென அதிகாரப்பூர்வ பழத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.
முக்கனிகளில் ஒன்றான பலா பழமானது கேரளத்தில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.மேலும் பலா மரங்களை பயிருடுவதிலும் பலதர பலா மரங்களை விளைவிப்பதிலும் கேரள மக்கள் அலாதி பிரியம் கொண்டவர்கள்.பலாப்பழம் மற்றும் அது சார்ந்த உற்பத்தியால் கேரள அரசு ஆண்டுதோறும் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது.தங்கள் மாநிலத்தில் பெருமளவில் விலைவிக்க வைக்கப்படும் பலாபழத்தின் உற்பத்தியினை அதிகரிக்க பல நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு படியாக சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் “மாநிலத்தின் பழமாக பலாப்பழத்தை அங்கீகரித்து வரும் 21-ம்தேதி சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட உள்ளோம்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கேரள மாநிலத்தின் பழமாக பலாப்பழத்தை அங்கீகரித்து கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் பலாப்பழத்தின் பயன்களையும் சத்துக்களையும் எடுத்துக்கூறி உள் மற்றும் வெளிநாடுகளில் பலாப்பழத்துக்கென சந்தைகளை ஏற்படுத்தவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது கேரளா மாநிலத்தின் விளங்காக யானை, பறவை வேழாம்பல், பூ கனிகொந்னா, மரம் தென்னை என அனைத்திலும் தனி சிறப்பு பொருட்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.