• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பப்ஜி விளையாட்டு ஆபத்தானது – டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு

February 5, 2019 தண்டோரா குழு

பப்ஜி விளையாட்டு ஆபத்தானது என டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது

ஸ்மார்ட் போன்களில் தற்போது வெளிவரும் புதிய விளையட்டுக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ப்ளூவேல் கேம் பெரும் வைரலாக பரவியது. இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற பெரும் அதிர்ச்சி எல்லாம் கிளம்பியது. இதனால் அரசு இந்த விளையாட்டை விளையாட தடை விதித்தது. அதையும் மீறி சிலர் விளையாண்டு தற்கொலை மற்றும்
தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் தற்போது புதிதாக பப்ஜி விளையாட்டு இளைஞர்களிடம் பிரபலமடைந்துள்ளது. இந்த விளையாட்டு இருக்கும் இடத்தில் இருந்து லைவ்வாக மற்றவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டே விளையாடும் விளையாட்டு என்பதால் இளைஞர்கள் இதில் ஆர்வத்துடன் விளையாடுகின்றனர். இதனால்,தற்போது சிறுவர் முதல் முதியோர் வரை பலரும் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகிபோயுள்ளார்கள் இதையடுத்து டெல்லியில் உள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில் குழந்தைகள் தற்போது விளையாடிவரும் பப்ஜி, ஃபோர்ட்நைட், கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ, காட் ஆஃப் வார், ஹிட்மேன் உள்ளிட்ட வீடியோ மற்றும் ஆன்லைன் கேம்கள் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த வகை கேம்களை தொடர்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு மனதளவில் வன்மம், பொறாமை, பெண்களின் மீதான வெறுப்பு, ஏமாற்றுத்தனம் உள்ளிட்ட பல கெட்ட செயல்களை கற்றுக் கொள்வார்கள் எனவும், அந்த அமைப்பு கூறியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க