• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பப்ஜி கேம் விளையாட செல்போன் வாங்கி தராததால் 18 வயது சிறுவன் தூக்கு மாட்டி தற்கொலை

February 5, 2019 தண்டோரா குழு

மும்பையில் பப்ஜி கேம் விளையாட செல்போன் வாங்கி தராததால் 18 வயது சிறுவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் போன்களில் தற்போது வெளிவரும் புதிய விளையாட்டுக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ப்ளூவேல் கேம் பெரும் வைரலாக பரவியது. இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற பெரும் அதிர்ச்சி எல்லாம் கிளம்பியது. இதனால் அரசு இந்த விளையாட்டை விளையாட தடை விதித்தது. அதையும் மீறி சிலர் விளையாண்டு தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், தற்போது புதிதாக பப்ஜி விளையாட்டு இளைஞர்கள் பிரபலமடைந்துள்ளது. இந்த விளையாட்டு இருக்கும் இடத்தில் இருந்து லைவ்வாக மற்றவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டே விளையாடும் விளையாட்டு என்பதால் இளைஞர்கள் இந்த விளையாட்டை ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
தற்போது சிறுவர் முதல் முதியோர் வரை பலரும் பப்ஜி விளையாட்டில் அடிமையாகிபோயுள்ளார்கள். இந்நிலையில் மும்பையில் 18வயது சிறுவன் தனது பெற்றோரிடம் பப்ஜி விளையாடுவதற்காக ரூ.37 ஆயிரம் மதிப்பிலான போனை வாங்கி தரும்படி கேட்டுள்ளான். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த அந்த சிறுவன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இந்த சிறுவனின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு செல்போன் கேம் மீது உள்ள மோகம் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு ஒருவரை அடியமையாக்கி வைத்துள்ளதால் இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பலர் மத்தியில் இந்த பப்ஜிக்கும் தடை விதிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க