• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்தார் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்

February 11, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், அதிமுகலிருந்து முக்கிய நிர்வாகிகள் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை காலை கல்வி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, பல அதிமுக மூத்த தலைவர்கள் பன்னீர் செல்வம் அணிக்கு தாவ வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

தற்போது மாஃபா பாண்டியராஜனை தொடர்ந்து ஜெயலலிதா மறைவிலிருந்து, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான பொன்னையன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

பொன்னையனின் இந்த ஆதரவு,சசிகலா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.

மேலும் படிக்க