• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பன்னீர்செல்வத்துடன் பேச்சு வார்த்தை நடத்த 9 பேர் கொண்டகுழு

April 18, 2017 தண்டோரா குழு

பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த சசிகலா அணியைச் சேர்ந்த 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா அணி, ஓ.பி.எஸ்அணி என அதிமுக இரண்டாக பிரிந்தது.இதனை தொடர்ந்து நடைபெறவிருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் முடக்கப்பட்டது.

இந்நிலையில் கட்சியையும், சின்னத்தை மீட்க இரு அணிகளும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பாக சசிகலா தரப்பினர் அணுகினால் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பன்னீர்செல்வம் நேற்று
தெரிவித்தார்.இதற்கு பன்னீர்செல்வம் தரப்பினர் உள்பட சசிகலா தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓ.பி.எஸ்அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த சசிகலா அணி சார்பில் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழுவில் வைத்தியலிங்கம், வேணுகோபால், ஜெயக்குமார், செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக்குழுவினர் ஓபிஎஸ் அணியுடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

மேலும் படிக்க