• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அதிகரிக்கும் எம்.பி க்கள்

February 12, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தரும் அ.தி.மு.க. எம்.பி.,க்கள் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.

முதன் முதலாக மைத்ரேயன் எம்.பி ஒ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்.அதனைத்தொடர்ந்து சனிக்கிழமை காலை ஆர். சுந்தரம் (நாமக்கல்), மற்றும் அசோக்குமார் (கிருஷ்ணகிரி) மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.சனிக்கிழமை இரவு மக்களவை உறுப்பினர்கள் வனரோஜா மற்றும் சத்யபாமா ஆகியோரும் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுகிழமை காலையில் வேலூர், தூத்துக்குடி , பெரம்பலூர் மக்களவை உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஞாயிற்றுகிழமை மதியம் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் எம்.பி., ராஜேந்திரன் எம்.பி., ஆகியோர் பன்னீர்செல்வம் அணியில் தங்களை இணைத்து கொண்டனர். இதனையடுத்து எம்.பி.,க்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து லட்சுமணனை நீக்கி அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதில் சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க