• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பத்திரிக்கையாளர்களின் மனதை புண்படும்படி பேசியிருந்தால் வருந்துகிறேன் – ரஜினி

May 31, 2018 தண்டோரா குழு

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளரிடம் நடந்து கொண்ட முறைக்கு நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி இந்த சம்பவத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என ஆவேசமாக ஹே வேறு ஏதும் கேள்வி இருக்கா? எனக் கேட்டார். பின்னர்போராட்டம் தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் எனக் கூறி அங்கிருந்து சென்றார்.

இதற்கிடையில், பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ரஜினிகாந்தின் செயலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வன்மையாக கண்டித்தது. மேலும், ரஜினி உடனடியாக தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.இந்நிலையில்,சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளரிடம் நடந்து கொண்ட முறைக்கு நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க