• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: முதலிடம் திருப்பூர் , கடைசி இடம் வேலூர்

April 29, 2019 தண்டோரா குழு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் 12 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது.
இதில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 93.3 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 4,816 மாற்றுத்திறனாளிகளில் 4,395 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதைபோல் தேர்வு எழுதிய 152 சிறை சிறைக்கைதிகளில் 110 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரியில் 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதைப்போல் 6,100 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.53 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும் 89 .98 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

மாவட்ட வாரிய தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:

1. திருப்பூர் : 98.53%
2. ராமநாதபுரம் : 98.48%
3. நாமக்கல்: 98.45%
4. ஈரோடு : 98.41%
5. கன்னியாகுமாரி : 98.08%
6. விருதுநகர் : 97.92%
7. சிவகங்கை : 97.42%
8. பெரம்பலூர் : 97.33%
9. மதுரை : 97.29%
10. தூத்துக்குடி : 96.95%
11. அரியலூர் : 96.71%
12. புதுக்கோட்டை : 96.51%
13. திருச்சி : 96.45%
14. கோவை : 96.44%
15 ஊட்டி : 96.27%
16. திருநெல்வேலி : 96.23%
17 தர்மபுரி : 96%
18. தஞ்சாவூர் : 95.92%
19. கரூர் : 95.61%
20. திருவண்ணாமலை : 95.56%
21 சேலம் : 95.50%
22. கிருஷ்ணகிரி : 94.36%
23. சென்னை : 94.18%
24. விழுப்புரம் : 93.85%
25. தேனி : 93.50%
26 திருவாரூர் : 93.35%
27. திருவள்ளூர் : 92.91%
28 கடலூர் : 92.86%
29 காஞ்சிபுரம் : 92.45%
30. திண்டுக்கல் : 92.40%
31. நாகப்பட்டினம் : 90.41%
32. வேலூர் : 89.98%

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 1,140 பேர் எழுதினார்கள். இதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க