June 18, 2020
தண்டோரா குழு
பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற கோரி கோவையில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீண்ட நாட்களாக தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் தங்களது ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசானை பிறப்பிக்க வேண்டி மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் சார்பாக கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
முக கவசம்,அணிந்து,சமூக இடைவெளியுடன் நடந்த இதில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் தலைவர் மனு நீதி சோழன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை SC பட்டியிலில் இருந்து நீக்கி MBC பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,தொடர்ந்து தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய இளைஞர்களை கூலி படையால் கொலைசெய்பவர்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் பேரவை நிர்வாகிகள் முருகராஜ், ராஜேந்திரசோழன், மணிமாறன், கிருஷ்ணமூர்த்தி,தீனா,சிவகுரு, மகேஷ், பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.