August 24, 2020
தண்டோரா குழு
பட்டியலில் இன மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.
பட்டியலின மாணவ மாணவிகளின் அழகான தேசிய பட்டியல் இன ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பட்டியலின மாணவ மாணவிகளின் சேர்க்கை உறுதிப்படுத்த கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதேபோல் தேசிய ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் மற்றும் மற்ற குழு கூட்டங்களையும் நடத்திட வேண்டுமென்றும் பட்டியலின மாணவ மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் கோவை மாநகர பாஜக மாவட்ட எஸ்சி அணியின் தலைவர் விவேக் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பட்டியலின மாணவ மாணவிகளின் பாதிப்பு அடையாமல் பள்ளி சேர்க்கை கல்லூரி சேர்க்கை காலங்களில் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழுக்கள் மூலம் ஆய்வு செய்து பட்டியலின மாணவ மாணவிகள் பாதிப்படையாத வண்ணம் உதவி செய்ய வேண்டும் என்றும் கடந்த ஆண்டு குழுக்கள் மூலம் ஆய்வு பணி செய்யவில்லை என்றும் இந்த ஆண்டு அவ்வாறு இல்லாமல் அனைத்து குழுக்களும் முறையாக செயல்பட்டு பட்டியலின மேம்பாட்டிற்காக உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.