October 7, 2025
தண்டோரா குழு
பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் டாடா ப்ளெக்சி திட்டத்தில் கோவை முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர்.
இதன் காரணமாக நடப்பு ஆண்டில் இதன் முதலீடானது 6 மடங்காக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு நிதி வெளியேற்றம், கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள், உலகளாவிய வர்த்தக பதட்டங்கள் மற்றும் சீரற்ற நிறுவன வருவாய் போன்றவற்றால் பங்கு சந்தைகள் கடந்த சில மாதங்களாக நிச்சயமற்றதாகவே உள்ளன. இதுபோன்ற சமயங்களில், முதலீட்டாளர்களுக்கு வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் சில முதலீட்டு திட்டங்கள் தேவை.
அந்த வகையில் ப்ளெக்சி கேப் பண்டுகள் மற்றும் மல்டி அசெட் அலோகேஷன் பண்டுகள் ஆகியவை அவற்றின் பல்வகைப்படுத்தல் மற்றும் தகவமைப்புத் தன்மைக்காக முதலீட்டாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருவதோடு, பங்கு சந்தைகள் நிச்சயமற்ற நிலையில் முதலீட்டாளர்கள் அந்த காலக்கட்டத்தை கடந்து வருவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.
இது குறித்து டாடா அசெட் மேனேஜ்மெண்ட் நிதி மேலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா கூறுகையில்,
உலக அளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் மற்றும் துறை மதிப்பீட்டு இடைவெளிகளால் இயக்கப்படும் இன்றைய பங்கு சந்தை ஏற்ற இறக்கம், நெகிழ்வுத்தன்மையுடன் பல்வகைப்படுத்தலை இணைக்கும் முதலீட்டு உத்திகளைக் கோருகிறது. ப்ளெக்சி கேப் பண்டுகள் மூலம் முதலீடு செய்யப்படும் நிதியானது பெரிய,நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதோடு, அதே நேரத்தில் சொத்து ஒதுக்கீட்டு நிதி பங்குகள், நிலையான வருமானம், தங்கம் மற்றும் பிற பொருட்களில் முதலீடு செய்யப்படுகின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் சிறந்த பலனை பெற முடியும் என்று தெரிவித்தார்.
ஏஎம்எப்ஐ தரவுகளின்படி, நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை ப்ளெக்சி கேப் பண்டுகளில் நிகர முதலீடு இரட்டிப்பாகி உள்ளது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ.22,751.3 கோடியிலிருந்து ரூ.46,867 கோடியாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் சொத்து ஒதுக்கீட்டு நிதிகள் ரூ.23,989.3 கோடியை ஈட்டியுள்ளன, இது ஹைபிரிட் முறையில் இரண்டாவது அதிகபட்ச தொகையாகும். தொழில்துறை மாற்றத்திற்கு ஏற்ற வகையில், டாடா ப்ளெக்சி கேப் பண்ட் மற்றும் டாடா மல்டி அசெட் அலோகேஷன் பண்ட் ஆகிய திட்டங்கள் முதலீட்டாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
டாடா எம்எப் தரவுகளின் படி அவற்றின் சராசரி சொத்து மேலாண்மையானது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியின் அடிப்படையில் முறையே 12.5 சதவீதம் மற்றும் 27 சதவீதம் அதிகரித்து, ஆகஸ்ட் 31, 2025 நிலவரப்படி ரூ.3,385 கோடி மற்றும் ரூ.4,040 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை டாடா ப்ளெக்சி கேப் பண்ட் திட்டம் ரூ.456 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு தொகையைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
கோயம்புத்தூரில், ப்ளெக்சி கேப் பண்டில் முதலீடுகள் ரூ.7.76 கோடியாக உயர்ந்துள்ளன, இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.1.29 கோடியாக இருந்தது. தற்போது இது 6 மடங்கு அதிகரித்துள்ளது.