• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பகவத்கீதை ஸ்லோகம் ஒப்பிக்கும் போட்டியில் இஸ்லாமிய சிறுமி முதலிடம்

March 17, 2017 தண்டோரா குழு

ஓடிசாவில் நடைபெற்ற பகவத்கீதை ஸ்லோகம் ஒப்பிக்கும் போட்டியில், 5 வயது இஸ்லாமிய சிறுமி முதலிடம் பிடித்தாள். அந்த பெண்ணின் சாதனை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பகவத்கீதை ஸ்லோகம் ஒப்பிக்கும் போட்டியை பிரக்ஞா மிஷன் என்ற அமைப்பு கடந்த புதன்கிழமை (மார்ச் 15) நடத்தியது. அந்தப் போட்டியில் ஃபிர்தோஷ் என்னும் 5 வயது இஸ்லாமிய சிறுமி கலந்துகொண்டாள். அவள் கேந்திரபாராவில் உள்ள சொவனியா சிஷ்யாஸ்ரம் என்ற பள்ளியில் முதல் வகுப்பு மாணவி.

அவளும் அவளுடைய 1௦ வயது சகோதரன் எஸ்.கே. சலிமுதினும் அந்த ரெசிடென்ஷியல் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களுடைய தந்தை துபாய் நாட்டில் பிளம்பராகப் பணியாற்றி வருகிறார். தமரபூர் கிராமத்தில் உள்ள பட்டமுண்டாய் தொகுதியில் அவர்களுடைய தாய் ஆரிஃபா பீபி வசித்து வருகிறார்.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உர்மில்லா கர் கூறுகையில், “பகவத் கீதையிலிருக்கும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களைத் தினமும் பள்ளி மாணவ மாணவியர்கள் சொல்லவேண்டும். எதையும் விரைவில் கற்றுக்கொள்ளும் திறனுடைய ஃபிர்தோஷ், பல ஸ்லோகங்களை எளிதில் மனப்பாடம் செய்து இந்த போட்டியில் அழகாக ஒப்பித்தாள்” என்றார்.

“என் பள்ளியில் ஆசிரியர்களிடமிருந்து ஸ்லோகங்களைக் கற்றுக்கொண்டேன். இந்தப் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளேன்” என்று சிறுமி ஃபிர்தோஷ் தன் கையில் பகவத் கீதையை வைத்துக்கொண்டு கூறினாள்.

“என்னுடைய மகளின் சாதனையைக் கண்டு பெருமையடைகிறேன். மத நல்லிணக்கம் பற்றி நம்பிக்கையுண்டு. இதை என் மகள் நிருபித்ததுள்ளாள். மதத்திற்கு இடையே சுவர் எழுப்பாமல், ஒருவரோடு ஒருவர் மகிழ்ச்சியாக வாழவேண்டும்” என்று ஆரிஃபா பீபி கூறினார்.

“மாநிலத்தின் பல பள்ளிகளிலிருந்து இந்த மாணவர்கள் இந்த போட்டில் கலந்து
கொண்டனர். சுலோங்களை ஒப்பிக்க 1௦௦ மதிப்பெண் குறிக்கப்பட்டிருந்தது. அதில் ஃபிர்தோஷ் 98 மதிப்பெண் பெற்றாள்” என்று சம்ஸ்கிருத ஆசிரியர் மற்றும் அப்போட்டியின் நீதிபதி அக்ஷயா பத்ரி கூறினார்.

மேலும் படிக்க