• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேற்று உடைக்கப்பட்ட பார் என்னுடையது அல்ல – பார் நாகராஜ்

March 14, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோவில் இருப்பது தான் அல்ல எனவும், மார்பிங் செய்து பொய்யான தகவல் பரப்பி வருவதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சதீஷ்,திருநாவுக்கரசு, வசந்தகுமார், சபரிராஜன் ஆகியோர் மீது வழக்கு செய்யபட்டது. மாணவர்கள் அரசியல் கட்சியினர் குற்றசெயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில் இந்த நால்வர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியதாக அதிமுகவை சேர்நாத பார் நாகராஜ், கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அதிமுகவில் இருந்தும் நாகராஜ் நீக்கப்பட்டார்.இதனிடையே ஆபாச படத்தில் பார் நாகராஜ் இருப்பதாக செய்திகள் வெளியாகின இதற்கு மறுப்பு தெரிவித்து பார் நாகராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கும் இந்த பிரச்சனைக்கு எந்த சம்பதமும் இல்லை என கூறியிருந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதில் சமூக வலைதளங்களில் வலம் வரும் வீடியோவில் இருப்பது தான் அல்ல எனவும் செய்திகளில் தான் தலைமறைவாக இருப்பதாக ஒளிப்பரப்ப படுவதால் தங்கள் குடும்பம் மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளதாக கூறினார். மேலும் மார்பிங் செய்து வீடியோ வெளியிடப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் நேரத்தில் அரசியல் இலாபத்திற்காக பொய்யான தகவல்கள் பரபப்படுவதாக தெரிவித்தார். நேற்று உடைக்கப்பட்ட பார் தன்னுடையது அல்ல எனவும், டாஸ்மாக் பாரை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே விட்டு விட்டதாகவும் கூறிய அவர், தனக்கு வேண்டாதவர்கள் தான் பாரை உடைத்தாக தெரிவித்தார்.

மேலும்தேவை இல்லாத அவதூறுகளை என் மீது பரப்ப வேண்டாம்.எந்த நேரமும் காவல் விசாரணைக்கு நான் ஆஜாரக தயார் என கூறியவர் இது குறித்து மாவட்ட் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.

மேலும் படிக்க