• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேருநகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆட்சியரிடம் மனு

December 29, 2022 தண்டோரா குழு

கோவை, நேருநகர், சித்ரா பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, நேருநகர் சந்திப்பு முதல் வீரியம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வரை காணப்படும் 60 அடி சாலையில் பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் என்ற பெயரில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொது மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.

சித்ரா பேருந்து நிலையத்தை, நேருநகர் குறத்தி குட்டை பகுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மேற்கொண்டார். இதற்காக குறத்தி குட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளவர்களை கீரணத்தம் சாலையிலுள்ள கரட்டுமேடு பகுதிக்கு இட மாற்றவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் இத்திட்டம் தொடர்பான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கைவிடப்பட்டது.

இங்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் மேட்டுப்பாளையம், நீலகிரி, சத்தியமங்கலம், மைசூர் ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்துகளை இயக்க முடியும். இதனால் சரவணம்பட்டி, அன்னூர் பகுதிகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க