• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேபாளம் இந்தியாவுக்கு இடையே புதிய போக்குவரத்து தொடக்கம்

October 16, 2017 தண்டோரா குழு

நேபாள் நாட்டிற்கும் இந்திய தலைநகர் புதுதில்லிக்கும் இடையே வாரம் ஒரு முறை நேரடி போக்குவரத்து இன்று முதல் தொடங்கியுள்ளது.

நேபாள நாட்டின் ரோப்லா மாவட்டத்தை இந்திய நாட்டின் தலைநகரான புதுடெல்லியுடன் இணைக்கும் வாராந்திர நேரடி பஸ் சேவை இன்று(அக்டோபர் 16) தொடங்கியது.

நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் மேற்கேயுள்ள ரோப்லா மாவட்டத்தை சேர்ந்த லிவாங் நகரிலிருந்து புதன்கிழமை புறப்படும். இந்திய தலைநகர் புதுதில்லியிலிருந்து மீண்டும் வெள்ளிக்கிழமை புறப்பட்டு காத்மண்டுவிற்கு திரும்பி செல்லும்.

இந்த பஸ் புதன்கிழமைகளில் ரோப்லாவில் உள்ள லிவாங் நகரில் இருந்து புறப்பட்டு பியுத்தான், பாலுவாங், நேபாள் வழியாக புதுதில்லியை வந்தடையும். இந்த பஸ் சேவையை ரல்பா போக்குவரத்து தனியார் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. இந்த பஸ் சேவைக்காக ஆன்லைன் மூலம் டிக்கெட்களைமுன் பதிவு செய்யவும் முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க