• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நுகர்வோர் பொருட்களுக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது : ஃபிளிப்கார்ட்

October 10, 2020 தண்டோரா குழு

இந்திய நுகர்வோர் பொருட்கள் சந்தையானது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாகும். மின்-வர்த்தகம், நாடு முழுவதும் தொலைதூர மூலைகளுக்கு அதை எடுத்துச் செல்வது, வளர்ச்சிக்கான முக்கிய காரணியாகத் திகழ்கிறது. இதுஅடுக்கு II மற்றும் அதற்கு அப்பால் உள்ள நகரங்களின் தேவைப்பாட்டினை உந்துசக்தியாகக்கொண்டுள்ளது. இது வரவிருக்கும் விழாக்காலம் மற்றும் அக்டோபர் 16 முதல் தொடங்கவுள்ள ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன்டேஸ் ஆகியவற்றை கருத்தில் கொள்கையில் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது.

இதன் வழியாக ,நுகர்வோர் தங்கள் பயன்பாட்டு தேவைகளை மலிவான முறையில் எளிதாக அணுக முடியும். சிறிய சந்தைகளின் தேவையை பூர்த்திசெய்வதில் ஃபிளிப்கார்ட் முன்னணியில் உள்ளது, அதன் பான்-இந்தியா வினியோகச் சங்கிலி மூலம் 20,000 பின்கோடுகள் மற்றும் பல நகரங்களில் நிறுவல் சேவைகளை வழங்குகிறது.இது,நோகாஸ்ட் ஈ.எம்.ஐ, டெபிட்கார்டு ஈ.எம்.ஐ போன்ற மலிவு கட்டண கட்டண முறைகளுடன் நுகர்வோருக்கு ஆன்லைனில் தடையின்றி ஷாப்பிங் செய்ய உதவியுள்ளது.

இது குறித்து ஃபிளிப்கார்ட்டின் மூத்த இயக்குனர் ஹரிகுமார் கூறுகையில் ,

புதிய உலக இயல்பில், நுகர்வோர் தங்கள் வேலையையும் வாழ்க்கையையும் சமநிலைப்படுத்துவதை பார்க்கும்போது, குறிப்பாக சிறிய நகரங்களிலிருந்து பல செயல்திறன் சார்ந்த நுகர்வோர் பயன்பாட்டு பொருட்களுக்கான தேவை அதிகரித்துவருவது தெளிவாகத் தெரிகிறது. அடுக்கு -2 நகரங்களிலும் அதற்கு அப்பாலும்உ ள்ள நுகர்வோரை அணுகும், வகையில் ஃபிளிப்கார்ட் ஒரு விரைவான சூழல் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விரைவான மற்றும் உறுதியான விநியோகத்தை உறுதி செய்கிறது மற்றும் அவர்களின் தனித்துவமான கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் பலவிதமான அறிவார்ந்த, பல் செயல்பாட்டுத்திறன் கொண்ட சாதனங்களை கிடைக்கச் செய்துள்ளது என்று கூறினார்.

மேலும் படிக்க