• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நுகர்வோர்கள் புகார் தெரிவிக்க (LMCTS – Mobile App)செயலி அறிமுகம்

June 20, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்க(LMCTS – Mobile App) என்னும் செயலி தொழிலாளர் நலத்துறையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்து நுகர்வோர்கள் எளிதில் புகார் தெரிவிக்கலாம் என தகவல் கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் மூலம் இன்று நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு செயலி (LMCTS – Mobile App)வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ராஜவீதி துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழிலாளர் நல துணை ஆணையர் தமிழரசி அவர்கள் தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது.

தொழிலாளர் நல துணை ஆணையர் தமிழரசி கருத்தரங்கில் பேசியதாவது;

“காலத்திற்கேற்றவாறு நுகர்வோர்களின் பாதுகாப்பை விருத்தி செய்கின்ற வகையில் அதிகபட்ச சில்லரை விலையைவிட அதிகவிலையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் எடையளவுகள் குறித்து புகார் தெரிவிக்க செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் முத்திரையிடப்படாத எடை அளவுகள் தொடர்பான குறைபாடுகள் மற்றும் தாங்கள் வாங்கும் பொட்டல பொருட்களின்தயாரிப்பாளர், பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர் பெயர், முகவரி, நிகர எடை, பொட்டலமிடப்பட்ட மாதம் மற்றும் வருடம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை இவற்றில் ஏதேனும் விடுபட்டு இருந்தால் தொழிலாளர்துறையின் மூலம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் பொட்டல பொருட்கள் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலும் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம். கூகுல் இணையத்தில் பிளே ஸ்டோரில் சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து நுகர்வோர்கள் எளிதில் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் கோவை மாவட்ட தொழிலாளர் துறை ஆய்வர்களிடமோ, சரக ஆய்வாளர்களிடமோ புகார் தெரிவிக்கலாம்.

நுகர்வோரிடமிருந்து தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது மேற்கண்ட குறைகள் தொடர்பாக புகார்கள் பெறப்படின் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இச்செயலி குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழச்சியில் தொழிலாளர் ஆய்வாளர் முருகேசன், நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

மேலும் படிக்க