• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீலகிரி: வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் சிறப்பு மலை ரயில்

June 2, 2018 தண்டோரா குழு

நீலகிரிக்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இப்படி மலை ரயிலில் பயணம் செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு சீசன் காலங்களில் பயணச்சீட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இதனை கருத்தில்கொண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் மலை ரயில் ஆர்வலர்கள் மலை ரயில் இயக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில்,சமீபத்தில் நீலகிரி மலை ரயிலை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்சிரேஷ்தா,சேலம் கோட்ட மேலாளர் சுப்புராவ் ஆகியோர்,நீலகிரியில் நிலக்கரி நீராவி இன்ஜின் மூலம் ரயில்களை இயக்க முடிவு செய்யப்படும் என அறிவித்தனர்.

இதன்படி,ஊட்டி – கேத்தி இடையே,வார நாட்களில்,வெள்ளி,சனி கிழமைகளில்,வட்ட சுற்றுலா ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.கேத்தி இடையே இன்று முதல் சிறப்பு மலை ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.வரும் 16ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயங்குகிறது.இதன்படி இன்று முதல் இந்த ரயில் இயக்கப்படுகிறது.இதில் 16 இருக்கைகள் கொண்ட ஒரு முதல் வகுப்பு,36 இருக்கைகள் மற்றும் 30 இருக்கைகள் கொண்ட இரு இரண்டாம் வகுப்பு,என 82 இருக்கைகளுடன் மூன்று பெட்டிகள் இயக்கப்படுகிறது.

மேலும்,ஊட்டியில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு கேத்தியை 3:00 மணிக்கு ரயில் சென்றடையும்.மதியம், 3:30 மணிக்கு புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு ஊட்டிக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் முதல் வகுப்பிற்கு 400 ரூபாயும்,இரண்டாம் வகுப்பிற்கு,200 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்யும் பயணி ஒருவருக்கு சமோசா, வெஜிடேபிள் சூப்,ரயில்வே சின்னம் பொறித்த தொப்பி,நீலகிரி மலை ரயில் குறித்த கையேடு, பேப்பர் பை ஆகியவை வழங்கப்படவுள்ளது.கிராம சுற்றுலாவை மேம்படுத்த இந்த சேவை துவக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க