• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீலகிரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

June 12, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலூகாவிற்குட்பட்ட பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த 5 நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.இன்று முதல் நீலகிரி மாவடத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக காணப்படும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில்,இன்று அதிகாலை முதல் ஊட்டி,குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டாரங்களில் மழை பெய்து வருகிறது.சில இடங்களில் கன மழையும்,பெரும்பாலான பகுதிகளிலும் மிதமான மழை பெய்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து கன மழைக்கு வாய்ப்புள்ள நிலையில்,பாதுகாப்பு கருதி நீலகிரி மாவட்டத்தில் குந்தா,ஊட்டி,கூடலூர்,பந்தலூர் மற்றும் குன்னூர் தாலூகாவில் எல்லநள்ளி வரையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை முதல் காற்றின் வேகம் சற்று குறைந்து காணப்பட்ட போதிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.தொடர்ந்து மழை பெய்து வருவதால்,பெரும்பாலான இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

மேலும் படிக்க