• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை நீக்க அரசு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது — மத்திய கொள்முதல் அமைச்சகத்தின் இயக்குனர் ஜெயசீலன்

July 16, 2019 தண்டோரா குழு

ஒவ்வொரு வீடு, கல்லூரி உள்ளிட்ட கட்டிடங்களிலும் உள்ள போர்வெல்லின் எண்ணிக்கை தொடர்பான தகவல் மாவட்ட, மாநகராட்சியிடம் இல்லை என்றும், அந்த எண்ணிக்கை இருந்தால் வீணாக்கப்படும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டு, நீர் மேலாண்மை திட்டத்தை முறைப்படுத்த முடியும் என மத்திய கொள்முதல் அமைச்சகத்தின் இயக்குனர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

கடந்த 11ஆம் தேதி முதல் கோவை மாவட்ட ஆட்சியர் இராசமணி வழிகாட்டுதலில், ஜல் சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் கோவையில் 8 மத்திய அரசு இயக்குனர்கள், 8 தொழில்நுட்ப வல்லுனர்களான விஞ்ஞானிகள் குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து வருகின்றனர். 6 ஆம் நாளான இன்று, கோவை சின்னவேடம்பட்டி ஏரியை மத்திய கொள்முதல் அமைச்சகத்தின் இயக்குநர் ஜெயசீலன், விஞ்ஞானி ஞானசுந்தரம் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் பேட்டி அளித்த மத்திய கொள்முதல் அமைச்சகத்தின் இயக்குநர் ஜெயசீலன்,

உலக உணவு, விவசாயம் வர்த்தக மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் பெய்கின்ற மழையில் 8 % மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், மழையை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த ஜல் சக்தி அபியான் திட்டம் துவங்கப்பட்டதாக கூறியவர், அரசு மட்டுமின்றி தனி மனிதனும் மழைநீர் சேகரிப்பில் பங்கு உள்ளது என்பதை இந்த திட்டம் வலியுறுத்துவதாக தெரிவித்தார். இத்திட்டம், எதிர்கால சமூகம் வாழ நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், மழைநீரை சேகரிக்கவும் ஊர்கூடி தேர் இழப்பது போல், மத்திய, மாநில அரசுகள், மக்கள் ஒன்றிணைந்து செயல்பட உதவும் என்றவர், தனிப்பட்ட மனிதன் 50 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தும் நிலையில், அதில் வெளியேற்றும் 35 ஆயிரம் லிட்டர் கழிவுநீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த அரசு 20 லட்சம் ரூபாய் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் வழங்குவதாக சுட்டிக்காட்டினார்.

ஜூலை 1 லிருந்து செப்டம்பர் 15 வரையிலும், அக்டோபர் 1 லிருந்து நவம்பர் 30 வரை 2 கட்டமாக செயல்படும் இத்திட்டம், இந்தியாவில் தண்ணீர் பஞ்சத்தில் வாடி வரும் 256 மாவட்டங்களில் உள்ள 1,592 தாலுகாக்களில், நிலத்தடி நீர் தொடர்பாக எண்ணிக்கை எடுக்கப்பட்டு, அதில் தண்ணீர் வீணாக்கப்படும் இடங்களை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். உற்பத்தியை விட பயன்பாடு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அக்டோபர் 30க்குள் இந்த கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, ஒவ்வொரு வகையிலும் வரைப்படம் தயாரிக்கப்பட்டு அறிக்கை மத்திய மாநில, அரசிற்கு வழங்கப்படும் என்றவர், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை நீக்க அரசு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளதாகவும், அதற்காகவே முதற்கட்ட ஆய்வில், அடிப்படை நீர்நிலைகள் எண்ணிக்கை தகவல்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க