• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கி வரும் ரோட்டரி இ கிளப் ஆஃப் மெட்ரோ டைனமிக்ஸ்

October 10, 2023 தண்டோரா குழு

ரோட்டரி இ கிளப் ஆஃப் மெட்ரோ டைனமிக்ஸ் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.இந்த இ கிளப்பில் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து என உலகம் முழுவதும் 38 உறுப்பினர்கள் உள்ளனர்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அன்று, இ கிளப் உறுப்பினர்களின் கையொப்ப திட்டத்தின் கீழ், ரூபாய் 7.91 லட்சம் மதிப்பில் இதயங்கள் அறக்கட்டளைக்கு ப்ரொஜெக்ட் அபாயா மற்றும் ப்ரொஜெக்ட் சில்ஃபிக்ஸ் திட்டங்கள் மூலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளுக்கு 42,000வலியற்ற ஊசிகள் மற்றும் 56 மினி குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலை ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் உள்ள மதுரம் டயாபடீஸ் மற்றும் தைராய்டு சென்டரில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் MD P.R விட்டல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கிளப் தலைவர் மற்றும் திட்டத் தலைவர் ரொட்டேரியன் ரேஷ்மா ரமேஷ்,செயலாளர் ரொட்டேரியன் மகேஷ் பிரபு, இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்
ரொட்டேரியன் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

அபாயா திட்டத்திற்கான CSR நிதியில் ரூபாய் 5 லட்சம் நன்கொடையாக எஸ்பி அப்பேரல்ஸ் நிர்வாக இயக்குநர் சுந்தரராஜன்
வழங்கினார்.இந்த திட்டத்தில் டைப் 1 நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறும் 100 குழந்தைகளுக்கு 42000 வலியற்ற ஊசிகள் வழங்கப்பட்டது. மேலும், ப்ரொஜெக்ட் சில்ஃபிக்ஸ் திட்டங்கள் மூலம் ரூபாய் 2.91 லட்சம் மதிப்பில்,சிறார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு 56 மினி குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்படாத இன்சுலின் அதன் மதிப்பை இழக்கிறது. எனவே இந்த மினி குளிர்சாதன பெட்டிகள் இன்சுலினை பாதுகாப்பிற்காக சேமிக்க பயன்படுகிறது. மெட்ரோ டைனமிக்ஸ் சார்பில் கடந்த 1.5 ஆண்டுகளில், சிறார் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதயங்கள் அறக்கட்டளை மூலம் ரூபாய் 62 லட்சம் மற்றும் இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 7.91 லட்சம் என மொத்தம் ரூபாய் 70 லட்சம் மதிப்பில் சிறார் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவுகவும்,
நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க