• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிபதி கர்ணனை கைது செய்ய முடியாமல் சென்னை திரும்பும் போலீஸார்..!!

May 10, 2017 தண்டோரா குழு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி செவ்வாய்க்கிழமை (நேற்று) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிபதி கர்ணனை கைது செய்ய காவல்துறையினர் தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையே, சென்னை வந்த நீதிபதி கர்ணன் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.

இதையடுத்து, கொல்கத்தா போலீஸார் சென்னை வந்திருந்தனர். கைது நடவடிக்கை தொடர்பாக மேற்குவங்க டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 4 பேர் சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹாவுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில்,நீதிபதி கர்ணன் ஆந்திராவில் உள்ள காளஹஸ்தியில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, முதலில் காளஹஸ்தி சென்றனர்.கொல்கத்தா போலீசாருடன், தமிழக காவல்துறையினரும் காளஹஸ்தி சென்றனர்.

ஆனால், கர்ணனின் தொலைபேசி தடா பகுதியில் இருப்பதாக காட்டியதையடுத்து தமிழக மற்றும் மேற்குவங்க காவல்துறையினர் தடா பகுதிக்குச் சென்றனர். அங்கு நடைபெற்ற சோதனையில் கர்ணன் இருப்பதற்கான தகவல் கிடைக்காததையடுத்து இருமாநில காவல்துறையினரும் சென்னை திரும்புகின்றனர்.

இதற்கிடையில், சென்னை சூளைமேட்டில் உள்ள கர்ணனின் மகன் வீட்டிலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே உயர் நீதிமன்ற நீதிபதி அளவில் இருக்கும் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்படுவது இதுவே முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க