• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு

June 23, 2017 தண்டோரா குழு

மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்பட்ட நீட் நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வு, பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே கடந்த மாதம் மே 7-ஆம் தேதி நடத்தப்பட்டது.

இத்தேர்வினை 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான கட்டுப்பாடுகள், வினாத்தாள் வடிவமைப்பு குறித்து, நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இதனையடுத்து நீட் தேர்வு முடிவை வெளியிட மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்தது.இதனை எதிர்த்து தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை வித்தித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையின் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் ஜுன் 12-ம் தேதி தடை விதித்தது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் http://cbseresults.nic.in/neet17rpx/neetJ17.htm வெளியிடப்பட்டன. இதில், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க