September 12, 2020
தண்டோரா குழு
நாளை தமிழகத்தில் மருத்துவர்களுக்கான நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மதுரையை சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்க்கா என்ற மாணவி இன்று கடிதம் எழுதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தொடர்ந்து நீட் தேர்வினால் மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்யும் சம்பவம் நடந்து வருவதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய மாநில அரசை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித நேய மக்கள் கட்சியினர் தமிழகத்தில் நீட்டை நடத்த கூடாது,மாணவர்களை காப்பாற்று,உயிரை பரிக்காதே என பதாகைகள் ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.