August 19, 2020
தண்டோரா குழு
நீட் தேர்வுக்கு பயந்து கோவையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை ஆர்எஸ் புரம் வெங்கடசாமி சாலை(கிழக்கு) பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் ரவிச்சந்திரனின் மகள் சுபஸ்ரீ (19). இவர் கடந்த இரண்டு வருடமாக நீட் தேர்வுக்காக தனியார் அகாடமியில் பயின்று வருகிறார். இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் நீட் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்புகள் வெளியானதையடுத்து மனவேதனைக்கு உள்ளானார்.
இதைத்தொடர்ந்து நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலைக்கும் முடிவு செய்த அவர் நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைதொடர்ந்து சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் ஆர் எஸ் புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் பிரேதத்தை கைப்பற்றி தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.