• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வுக்கு தயாராக சொல்லி தந்தை வற்புறுத்தியதால் மாணவர் தற்கொலை

May 15, 2020 தண்டோரா குழு

கோவையில் நீட் தேர்வுக்கு தயாராக சொல்லி தந்தை வற்புறுத்தியதால் மாணவர் தற்கொலை செய்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாஸ்கர்(51).இவரது மூத்த மகன் சரண் பாலாஜி(19) 12ம் வகுப்பு தேர்வு எழுதி ரிசல்ட்க்காக காத்திருக்கும் நிலையில் தந்தை பாஸ்கர் மகனை நீட் தேர்வு எழுத தயாராகும் படி கூறியுள்ளார்.

இதனால் பாலாஜி மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் சரண் பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தை படிக்க சொல்லியதால் மனமுடைந்து மாணவன் தற்கொலை செய்து கொண்டது அங்குள்ள குடியிருப்பவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க