• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வுக்கு தடை கோரி கோவையில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்

September 8, 2017 தண்டோரா குழு

மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்த மன விரக்தியில், அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க கோரி, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு,வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை நீதிமன்றத்திலிருந்து பேரணியாக புறபட்ட அவர்கள் கோவை ரயில்நிலையத்தில் 3 வது பிளாட் பார்மில் அழப்பி – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். அதன் பின்னர் ரயில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து காவல்துறையினர் 57 பேரை கைது செய்தனர்.

“கல்வியை பொது பட்டியலில் இருந்து விடுவித்து , மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்,” என கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கே எம் தண்டபாணி செய்தியாளர்களிடம் கூறினார்.

சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற மறியல் போராட்டம் காரணமாக ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க